Friday, June 12, 2009

Manager Vs Developers

தளபதி remix நகைச்சுவை

தளபதி படதுல ரஜினியையும் மமுட்டியையும் அரவிந்சாமி கூப்பிட்டு எல்லாகட்டபஞ்சாயத்தையும் நிறுத்த சொல்லும் காட்சியை நகைசுவைக்காக software companyயில் நடக்கும் ஒரு meeting போலவும், ரஜினி, மமுட்டி மற்றும் நாகேஷ் ஆகியோர் developersஆகவும் அரவிந்சாமியை PMஆகவும் கிட்டியை TLஆகவும் இங்கே சித்தரித்துள்ளேன்.

வசனம் மறந்தவர்கள் கீழே உள்ள வீடியொவை பார்த்துவிட்டு வசனத்தைபடிக்கவும்.....



கதாப்பாத்திரதின் பெயர்கள்:
அரவிந்சாமி -
அர்ஜுன்
ரஜினி -
சூர்யா
மமுட்டி -
தேவராஜ்
கிட்டி -
PL
நாகேஷ் - பந்தலு


அர்: இங்க மொத்தம் 64 issues தேவராஜ் மேலயும் சூர்யா மேலயும். இங்க உங்களுக்குனு தனி module, தனி QA, ஒரு தனி teamஏ எழுதுரீங்க.
நீங்க சொன்னா உடனே functionalityய மாத்திடனும் இல்லைனா codeல ஒரே குழருபடிதான். நீங்க பார்த்து எழுதரதுதான் code. PM என்ன சொன்னாலும் நீங்க பண்ண்றதுதான் coding, implementation, bug fixing, testing, documentation, training, எல்லாதுக்கும் நீங்க தான் PM. உங்க team தான் project.

தே: Fix எப்படினு கேட்டு 10 trainee வர்ராங்க. எங்களால முடிஞ்ச Fix கொடுக்கிறோம்.

PL: Training கொடுக்க PM இருக்கார், PL இருக்கார் ஒரு teamஏவ இருக்கு அவங்க கொடுக்கட்டுமே

பந்: உங்களால முடியலைனு தானே எங்ககிட்ட வர்ராங்க

அர்: அதனால தான் வர்ராங்களா இல்ல seniorங்கரதால வர்ராங்களா

சூர்: அவங்க எங்ககிட்ட trainingக்கு வர்ரது, உங்களுக்கு பிடிக்கலைல

அர்: எந்த code சரி எந்த code errorங்கரத பத்தி தான் பேசுறோம்

சூர்: PM Sir நீங்க் எப்பவாவது traineeயா இருந்திருக்கீங்களா? என்னைக்காவது ஒழுங்கா training கொடுத்திருக்கிங்களா? எப்பவாவது code எழுதிருக்கிங்களா? code எழுதாம ஒழுங்கா training கொடுக்கமுடியாது. 100 தடவ doubt கேட்டு உங்ககிட்ட வரமுடியாது. என்ன பண்ணுவாங்க? அவங்களுக்கு வேண்டியது ஒழுங்கான training அது எங்ககிடைக்குதோ அங்க போவாங்க

PL: உங்க கேபின்ல கொடுக்கிறது தான் trainingஆ...

தே: பின்ன உங்க ரூமல கதற கதற கொடுக்கிறதுக்கு பேர் தான் trainingஆ??

அர்: எது training எது training இல்லைனு சொல்லறதுக்குதான் Managementனு ஒன்னு இருக்கு. அத செயல்படுத்ததான் எல்லாம் நாங்க இருக்கோம்

சூர்: trainingஅ நீங்க கொடுத்தா சரி அதே trainingஅ நாங்க கொடுத்தா தப்பு

அர்: PMம் TLம் கொடுக்கர trainingஅ தேவாவும், சூர்யாவும் கொடுக்கரது தப்பு, 100 doubtஅ நீங்க clear பண்றது தப்பு

சூர்: நல்லா இருக்கு சார் நீங்க சொல்றது. உங்ககிட்ட ஒருத்தன் sample code கொண்டுவந்தா அதுல, இது correct, இது தப்பு, இங்க log போடு அங்க log போடாதே. நீ இத செய், நீ இத செய்யாதேனு நீங்க சொல்லலாம். அதே நங்க சொன்னா தப்பு, கூப்ட்டு வெச்சு meeting போட்டுவீங்க. PM training கொடுக்கலாம், மத்தவங்க கொடுக்ககூடாது. என்னா PMன்ற அதிகாரம், PLன்ற அதிகாரம்.
எங்ககிட்ட என்ன இருக்குனு தெரியுமா சார்? நம்பிக்கை, traineeக்கு எங்க மேல இருக்கர நம்பிக்கை. உங்களால கொடுக்கமுடியாத training, எங்களால கொடுக்கமுடியும்னு நம்புறங்க. போதுமா

அர்: முடிச்சுடியா? கத்தவேண்டியதெல்லாம் கத்தி முடிச்சுட்டியா? உங்க கத்தலுக்கெயல்லாம் நாங்க பயப்படமாட்டோம்.

சூர்: உங்களுக்கு எங்கள பிடிக்கலைல. நீங்க நல்ல positionalல இருக்கீங்க, நல்ல படிச்சு இருக்கீங்க, நல்லா வசதியா இருக்கீங்க. எங்கள மாதிரி சாதாரன developer training கொடுத்தா பிடிக்காதில்ல

அர் : ஆமா பிடிக்காது. அதுவும் உன்ன மாதிரி ஒழுங்கா training கொடுக்கறவங்கள சுத்தமா பிடிக்காது

சூர்: நான் developer சார். டெஸ்ட் பண்ணதீங்க.

PL: மரியாத இல்லம பேசுறான். Bug போட்டுருவேன்..

சூர்: போடுரா பாக்கலாம், போடுரா பாக்கலாம்...

தே: வேண்டாம் சூர்யா.
(PMஅ பார்த்து) உங்களுக்கு என்ன வேண்ணும்? என்ன செய்யனும்?

அர்: நிறுத்தனும் ஒழுங்கா training கொடுக்கறத நிறுத்தனும்

தே: முடியாது



தங்களது மேலன்னா கருத்துக்களை பின்னூட்டமிடவும்

பெஞ்ச்ல உக்காராதீர்கள்

தலைப்பைப் பார்த்துட்டு எந்த பென்ச்ல உக்கார வேண்டாமுனு சொல்ரேனு குழ்ம்பவேண்டாம்.

பொதுவா எந்த வேலையாயிருந்தாலும் சும்மா உக்கார்ந்தா வேலையவுட்டு துரத்திடுவாங்க அப்படி இருக்க software companyல ஆயிரகணக்கா சம்பளம் வாங்கிட்டு சும்ம உக்கர்ந்தா சும்ம விடுவங்களா???

நான் இப்போ என்ன சொல்லறேன்னா, இன்றைக்கு Satyam computersல வேலை செய்யும் சும்மார் பாத்தாயிரத்துக்கும் மேலான பென்ச்ல உக்கார்ந்த ஊளியர்களுக்கு basic salary, PF மற்றும் MA மட்டுமே வழங்கப்படும்னு செய்தி. ஆனா அங்கு வேலை பார்க்கும் சிலர் மூவாயிரம் ரூபாய் தான் சம்பளம்னு சொல்ராங்க.

மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

குறிப்பு: இந்த நிலைமை நாளை எனக்கும் அல்லது உங்களுக்கும் வரலாம், அதனால வேலை இல்லைனா எப்படியாவது PM அல்லது HR கிட்டயோ போய் project கேட்டு வாங்கி வேலை செய்யனும்.

Saturday, June 6, 2009

தசாவதாரம் - கல்லை மட்டும்

hardware மட்டும் கண்டால் software தெரியாது
software மட்டும் கண்டால் hardware தெரியாது ..
எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் கழியாது
windowsஐ ஏற்கும் நெஞ்சு
linux பார்காது
tester கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
coder கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்

hardware மட்டும் கண்டால் software தெரியாது
software மட்டும் கண்டால் hardware தெரியாது ..(2)

chorus:
கம்பெனியில் வளர்க நம் coderகல், bug எல்லாம் அகல
maintenance project code உள்ளே புகுந்து logic எல்லாம் விளங்க

பல்லாண்டு பல்லாண்டு பள்ளயிரதண்டு பல கோடி நுறாயிரம்,
maintenanceன் தொல்லை மாளாது உன் logic உன்னை காக்கும்

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
bugஐ தந்தபோதும் எங்கள் code மாறாது.. (2)
வீரclient உங்கள் முன்னால் எங்கள் வீரproject தோற்காது
PM சொல்லுக்கு அஞ்சி என்றும் .net linuxல் ஓடாது
solaris நாயகன் java coder தான்
Java சேய் இந்த j2ee தான்
நாட்டில் உண்டு ஆயிரம் java coder தான்
javacoderக்கு ராஜன் இந்த பொடிப்பையன் தான்

bugக்கு உள்ளே மூழ்கினாலும் code சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் logic சாகாது ..(2)
பரவும் virus வந்து system கெடுக்கும் projectஐ அது கெடுக்காது
tester codeஐ test பண்ணுவன் அந்த tester தன்னை testபண்ணுமா
java என்று பார்த்தால் dotnet தெரியாது
dotnet என்று பார்த்தால் linux கிடையாது ..

hardware மட்டும் கண்டால் software தெரியாது
software மட்டும் கண்டால் hardware தெரியாது ..

எனது கிறுக்கல் - 1

எனது கிறுக்கல் படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4 ல் பதிவாகி இருக்கிறது

அங்கே கிறுக்கியது.....

மகிழ்வாய் பறக்கிறது ஒரு பஞ்சவர்ணம்

தன் வர்ணமான எதிர்காலத்தை நோக்கி...

-----------------------------------------------------------------------------------------

அழகுக்கு அழகு சேர்க்கிறது
நீல வானமும்,
அலையற்ற கடற்கரையும்...



Tuesday, December 23, 2008

திருடர்கள் ஜாக்கிரதை

ரமேஷ் SIET காலேஜ் பஸ் stopசைதாபேட்டை போகறதுக்கு பஸ்சுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான். அப்போ அங்கவொரு ஜோடி கடலை வறுத்துகிட்டு இருந்தாங்க. 'நமக்கு ஒரு ஆள் கிடைகலையேனு' இருந்தப்ப .... ஒரு பொண்ணு பக்கத்துல வந்து நின்னா. அவ அழகா இருந்தா. மேல் சட்ட பாக்கெட்ல இருந்த செல் போன் சிணுங்க, யாருன்னு பாத்தா கூப்டது ரூம் மேட் பாலா, எடுத்து டேய் நான் ரூம்க்கு தான் வந்துட்டு இருக்கேன் சொல்லி உடனே வச்சுடேன். 'இந்த பஸ் saidapet போகுமான்னு' ஒரு குரல் கேட்டது. அவனுக்கு ஒரே மகிழ்ச்சி, ஏன்னா அது அந்த பெண்குரலோ நினைச்சான் (அப்போ அவனுக்கு மட்டும் காதுல ' தம்தன தம்தன தம்தன தம்தன' பாட்டு கேக்குது) அவன் திரும்பி பார்த்தா அது ஒரு கிழவி. அடடா just miss.

அப்போ 18A பஸ் வந்து நின்றது. பஸ்ல ஏறும் போது அந்த பெண்ணும் பஸ்ல ஏறினா. அவன் பஸ்ல கடைசி சீட்டுக்கு கொஞ்சம் முன்னாடி நினான். அந்த பொண்ணு இவனுக்கு கொஞ்சம் முன்னாடி நின்றாள். இவன் அந்த பொண்ணையே பார்த்துக்கிட்டு வர பஸ் சைடபெட்டை நோக்கி நகர தொடங்கியது. இவன் அந்த பொண்ண தவிர் வேற யாரும் பாக்கல வேற எதையும் கவனிக்கல. இப்ப பஸ் நந்தனம் பஸ் ஸ்டாப்ல நிக்கும் போது. இவனுக்கு பின்னாடி இருந்து 'இந்த ஸ்டாப் சைதாபேட்டையா'னு ஒரு ஆண் குரல். இவன் தலைய மட்டும் திருப்பி இல்ல அடுத்த ஸ்டாப்னு சொல்றதுக்குள்ள அவன் மேல் சட்டை பாக்கெட்ல ஏதோ குறையற மாதிரி தெரிய சட்டுன்னு பாக்கெட்ட பார்த்த அங்க செல் போன காணாம். உடனே திரும்பின தன்னோடசெல் போன் ஒருத்தன் கையலிருந்து இன்னோருதன் கைக்கு போகும் போது புடிங்கிட்டான். நல்லா வேல இருவதாயிறம் ரூபா செல் போன் தப்பிச்சது.

குறிப்பு: இது ஒரு உண்மை சம்பவம், ஆகயால் மக்களே பஸ்லயோ / ராயிலயோ போகும் போது கவனமா இருக்கவும்

Tuesday, August 5, 2008

என்ன எழுதலாம் ??????

என்ன எழுதலானு யோசிச்சப்ப ஒரு மொக்க காமெடி ஞாபகத்துக்கு வந்தது ,



நாம பஸ்ல ஏறலாம் ஆனா,

பஸ்ல நாம ஏறலாமா ???????


ஏறலாம் ஆனா ஒன்னும் ஆகாது .... ஹி ஹி ஹி ஹி


 

blogger templates 3 columns | Make Money Online