Tuesday, December 23, 2008

திருடர்கள் ஜாக்கிரதை

ரமேஷ் SIET காலேஜ் பஸ் stopசைதாபேட்டை போகறதுக்கு பஸ்சுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தான். அப்போ அங்கவொரு ஜோடி கடலை வறுத்துகிட்டு இருந்தாங்க. 'நமக்கு ஒரு ஆள் கிடைகலையேனு' இருந்தப்ப .... ஒரு பொண்ணு பக்கத்துல வந்து நின்னா. அவ அழகா இருந்தா. மேல் சட்ட பாக்கெட்ல இருந்த செல் போன் சிணுங்க, யாருன்னு பாத்தா கூப்டது ரூம் மேட் பாலா, எடுத்து டேய் நான் ரூம்க்கு தான் வந்துட்டு இருக்கேன் சொல்லி உடனே வச்சுடேன். 'இந்த பஸ் saidapet போகுமான்னு' ஒரு குரல் கேட்டது. அவனுக்கு ஒரே மகிழ்ச்சி, ஏன்னா அது அந்த பெண்குரலோ நினைச்சான் (அப்போ அவனுக்கு மட்டும் காதுல ' தம்தன தம்தன தம்தன தம்தன' பாட்டு கேக்குது) அவன் திரும்பி பார்த்தா அது ஒரு கிழவி. அடடா just miss.

அப்போ 18A பஸ் வந்து நின்றது. பஸ்ல ஏறும் போது அந்த பெண்ணும் பஸ்ல ஏறினா. அவன் பஸ்ல கடைசி சீட்டுக்கு கொஞ்சம் முன்னாடி நினான். அந்த பொண்ணு இவனுக்கு கொஞ்சம் முன்னாடி நின்றாள். இவன் அந்த பொண்ணையே பார்த்துக்கிட்டு வர பஸ் சைடபெட்டை நோக்கி நகர தொடங்கியது. இவன் அந்த பொண்ண தவிர் வேற யாரும் பாக்கல வேற எதையும் கவனிக்கல. இப்ப பஸ் நந்தனம் பஸ் ஸ்டாப்ல நிக்கும் போது. இவனுக்கு பின்னாடி இருந்து 'இந்த ஸ்டாப் சைதாபேட்டையா'னு ஒரு ஆண் குரல். இவன் தலைய மட்டும் திருப்பி இல்ல அடுத்த ஸ்டாப்னு சொல்றதுக்குள்ள அவன் மேல் சட்டை பாக்கெட்ல ஏதோ குறையற மாதிரி தெரிய சட்டுன்னு பாக்கெட்ட பார்த்த அங்க செல் போன காணாம். உடனே திரும்பின தன்னோடசெல் போன் ஒருத்தன் கையலிருந்து இன்னோருதன் கைக்கு போகும் போது புடிங்கிட்டான். நல்லா வேல இருவதாயிறம் ரூபா செல் போன் தப்பிச்சது.

குறிப்பு: இது ஒரு உண்மை சம்பவம், ஆகயால் மக்களே பஸ்லயோ / ராயிலயோ போகும் போது கவனமா இருக்கவும்

0 Comments:

 

blogger templates 3 columns | Make Money Online