Friday, June 12, 2009

Manager Vs Developers

தளபதி remix நகைச்சுவை

தளபதி படதுல ரஜினியையும் மமுட்டியையும் அரவிந்சாமி கூப்பிட்டு எல்லாகட்டபஞ்சாயத்தையும் நிறுத்த சொல்லும் காட்சியை நகைசுவைக்காக software companyயில் நடக்கும் ஒரு meeting போலவும், ரஜினி, மமுட்டி மற்றும் நாகேஷ் ஆகியோர் developersஆகவும் அரவிந்சாமியை PMஆகவும் கிட்டியை TLஆகவும் இங்கே சித்தரித்துள்ளேன்.

வசனம் மறந்தவர்கள் கீழே உள்ள வீடியொவை பார்த்துவிட்டு வசனத்தைபடிக்கவும்.....



கதாப்பாத்திரதின் பெயர்கள்:
அரவிந்சாமி -
அர்ஜுன்
ரஜினி -
சூர்யா
மமுட்டி -
தேவராஜ்
கிட்டி -
PL
நாகேஷ் - பந்தலு


அர்: இங்க மொத்தம் 64 issues தேவராஜ் மேலயும் சூர்யா மேலயும். இங்க உங்களுக்குனு தனி module, தனி QA, ஒரு தனி teamஏ எழுதுரீங்க.
நீங்க சொன்னா உடனே functionalityய மாத்திடனும் இல்லைனா codeல ஒரே குழருபடிதான். நீங்க பார்த்து எழுதரதுதான் code. PM என்ன சொன்னாலும் நீங்க பண்ண்றதுதான் coding, implementation, bug fixing, testing, documentation, training, எல்லாதுக்கும் நீங்க தான் PM. உங்க team தான் project.

தே: Fix எப்படினு கேட்டு 10 trainee வர்ராங்க. எங்களால முடிஞ்ச Fix கொடுக்கிறோம்.

PL: Training கொடுக்க PM இருக்கார், PL இருக்கார் ஒரு teamஏவ இருக்கு அவங்க கொடுக்கட்டுமே

பந்: உங்களால முடியலைனு தானே எங்ககிட்ட வர்ராங்க

அர்: அதனால தான் வர்ராங்களா இல்ல seniorங்கரதால வர்ராங்களா

சூர்: அவங்க எங்ககிட்ட trainingக்கு வர்ரது, உங்களுக்கு பிடிக்கலைல

அர்: எந்த code சரி எந்த code errorங்கரத பத்தி தான் பேசுறோம்

சூர்: PM Sir நீங்க் எப்பவாவது traineeயா இருந்திருக்கீங்களா? என்னைக்காவது ஒழுங்கா training கொடுத்திருக்கிங்களா? எப்பவாவது code எழுதிருக்கிங்களா? code எழுதாம ஒழுங்கா training கொடுக்கமுடியாது. 100 தடவ doubt கேட்டு உங்ககிட்ட வரமுடியாது. என்ன பண்ணுவாங்க? அவங்களுக்கு வேண்டியது ஒழுங்கான training அது எங்ககிடைக்குதோ அங்க போவாங்க

PL: உங்க கேபின்ல கொடுக்கிறது தான் trainingஆ...

தே: பின்ன உங்க ரூமல கதற கதற கொடுக்கிறதுக்கு பேர் தான் trainingஆ??

அர்: எது training எது training இல்லைனு சொல்லறதுக்குதான் Managementனு ஒன்னு இருக்கு. அத செயல்படுத்ததான் எல்லாம் நாங்க இருக்கோம்

சூர்: trainingஅ நீங்க கொடுத்தா சரி அதே trainingஅ நாங்க கொடுத்தா தப்பு

அர்: PMம் TLம் கொடுக்கர trainingஅ தேவாவும், சூர்யாவும் கொடுக்கரது தப்பு, 100 doubtஅ நீங்க clear பண்றது தப்பு

சூர்: நல்லா இருக்கு சார் நீங்க சொல்றது. உங்ககிட்ட ஒருத்தன் sample code கொண்டுவந்தா அதுல, இது correct, இது தப்பு, இங்க log போடு அங்க log போடாதே. நீ இத செய், நீ இத செய்யாதேனு நீங்க சொல்லலாம். அதே நங்க சொன்னா தப்பு, கூப்ட்டு வெச்சு meeting போட்டுவீங்க. PM training கொடுக்கலாம், மத்தவங்க கொடுக்ககூடாது. என்னா PMன்ற அதிகாரம், PLன்ற அதிகாரம்.
எங்ககிட்ட என்ன இருக்குனு தெரியுமா சார்? நம்பிக்கை, traineeக்கு எங்க மேல இருக்கர நம்பிக்கை. உங்களால கொடுக்கமுடியாத training, எங்களால கொடுக்கமுடியும்னு நம்புறங்க. போதுமா

அர்: முடிச்சுடியா? கத்தவேண்டியதெல்லாம் கத்தி முடிச்சுட்டியா? உங்க கத்தலுக்கெயல்லாம் நாங்க பயப்படமாட்டோம்.

சூர்: உங்களுக்கு எங்கள பிடிக்கலைல. நீங்க நல்ல positionalல இருக்கீங்க, நல்ல படிச்சு இருக்கீங்க, நல்லா வசதியா இருக்கீங்க. எங்கள மாதிரி சாதாரன developer training கொடுத்தா பிடிக்காதில்ல

அர் : ஆமா பிடிக்காது. அதுவும் உன்ன மாதிரி ஒழுங்கா training கொடுக்கறவங்கள சுத்தமா பிடிக்காது

சூர்: நான் developer சார். டெஸ்ட் பண்ணதீங்க.

PL: மரியாத இல்லம பேசுறான். Bug போட்டுருவேன்..

சூர்: போடுரா பாக்கலாம், போடுரா பாக்கலாம்...

தே: வேண்டாம் சூர்யா.
(PMஅ பார்த்து) உங்களுக்கு என்ன வேண்ணும்? என்ன செய்யனும்?

அர்: நிறுத்தனும் ஒழுங்கா training கொடுக்கறத நிறுத்தனும்

தே: முடியாது



தங்களது மேலன்னா கருத்துக்களை பின்னூட்டமிடவும்

7 Comments:

இராகவன் நைஜிரியா said...

அய்யோ... அய்யோ....அய்யோ...

இப்படி அலற விட்டுடீங்களே...

பதிவுலகில் இப்படி ஒரு மொக்கையா...
தாங்க முடியலடா சாமி...

RAMYA said...

பொடிப்பையன் அவர்களே!

நல்லா எழுதி இருக்கீங்க பல இடங்களில் உங்க கஷ்டம் எனக்கு புரிஞ்சிது.

அது சரி நீங்க இதுலே யாரு? சொன்னாதான் நான் இப்போ ஒரு முடிவிற்கு வரமுடியும். :-)

ஏன்னா நானும் பலர் நடுவிலே உக்காந்து அவங்க எழுதின coding புரியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன். அதான் கேட்டேன். :)

ஹையோ ஹையோ செம காமெடி :)

பொடிப்பையன் said...

இராகவன் நைஜிரியா,
வருகைக்கு நன்றி... கஷ்டத்த சொன்ன உங்களுக்கு மொக்கைய தெரியுது.... ஹும்....

பொடிப்பையன் said...

hi Ramya,

வருகைக்கு நன்றி...

நானும் ஒரு senior developer தான், நேரமின்மை காரணமாக ஒருவருடைய வேலைய நான் எடுத்து செஞ்சேன், ஒரு வேலை அதன் பிரதிபலிப்பாக கூட இருக்கலாம்....

நட்புடன் ஜமால் said...

இரசித்தேன்!

எப்படி எல்லாமோ சிந்திக்கிறீங்கப்பா!

சுண்டெலி(காதல் கவி) said...

kallai mattum kandal remix nandraaga irukkirathu.en pathivayum mudinthaal padikkavum.www.kathalkavi.blogspot.com

சுண்டெலி(காதல் கவி) said...

ungal remix nandraaga irukkirathu

 

blogger templates 3 columns | Make Money Online